பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக அரசு அனைத்து கோவில்களுக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி 4 நாட்களுக்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதி அளிக்கப்படுகிறது.
காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.காய்ச்சல், சளி, இருமல் உள்ள பக்தர்களும், 10 வயதுக்குட்பட்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு வர அனுமதியில்லை. அத்துடன் முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு நேரத்தில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை. நீர் ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்கக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story