தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
ரெயில்நிலையம் முன்பு மழைநீர்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஆடைகள் நனைந்து விடுகின்றன. மேலும் முதியவர்கள் வழுக்கி விழுந்து விடுகின்றனர். எனவே ரெயில் நிலையத்தின் முன்பு தண்ணீர் தேங்காமல் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ் கண்ணன், திண்டுக்கல்.
குண்டும், குழியுமான சாலைகள்
திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தில் விரிவாக்க பகுதிகளில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. மேலும் மழை பெய்யும் போது பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பலர் தடுமாறி விழுந்து விடுகின்றனர். இந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், பாலகிருஷ்ணாபுரம்.
சேதம் அடைந்த சாலை
சாணார்பட்டி ஒன்றியம் ராகலாபுரம் கிராமத்தில் உள்ள சாலை சேதம் அடைந்து நீண்ட நாட்களாகி விட்டது. மழைக்காலத்தில் சாலை மேலும் சேதமாகி விடுவதோடு, மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஒருசில நாட்கள் பஸ் கூட வருவதில்லை. பொதுமக்களின் நலன்கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.
-அன்பரசு, ராகலாபுரம்.
மழைநீர் ஒழுகும் பஸ்
வேடசந்தூர் தாலுகா சிங்கிலிக்காம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு பஸ் மிகவும் பழையது. அந்த பஸ்சின் மேற்கூரை, ஜன்னல்கள் சேதம் அடைந்து விட்டன. இதனால் சாரல் மழை பெய்தால் கூட பஸ்சில் ஒழுகுகிறது. பயணிகள் நனைந்தபடி பஸ்சுக்குள் அமரும் நிலை உள்ளது. எனவே, பஸ்சை சரிசெய்ய வேண்டும்.
-நாகராஜன், தொன்னிக்கல்பட்டி.
சாலை ஓரம் குப்பைகள்
திண்டுக்கல் உழவர் சந்தைக்கு அருகே திருச்சி செல்லும் சாலை ஓரத்தில் குப்பை, கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. தற்போது மழைக்காலமாக இருப்பதால் கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, சாலை ஓரத்தில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-மாரி, திண்டுக்கல்.
Related Tags :
Next Story