செல்லிபாளையத்தில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது


செல்லிபாளையத்தில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 17 Oct 2021 2:01 AM IST (Updated: 17 Oct 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

செல்லிபாளையத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திடீரென்று மாலை 5 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இரவு 7 மணிக்கு மேலும் மழை நீடித்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் செல்லிபாளையம் ஏரி மற்றும் வாய்க்காலில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் செல்லிபாளையத்தில் உள்ள 6-வது வார்டு விநாயகர் தெருவில் செல்லிபாளையம் ஏரி வழியாக வரும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததோடு, அந்த தெருவில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் வீட்டில் இருந்து தண்ணீரை வெளியேற்றியதோடு, தூங்க முடியாத நிலையும் தெருவில் சென்ற தண்ணீரில் வந்த விஷ ஜந்துகள் வீட்டிற்குள் புகும் அவல நிலையும் இருந்தது. செல்லிபாளையம் ஏரி வழியாக வரும் தண்ணீர் மருவத்தூர் வழியாக துறையூர் பெரிய ஏரியை வந்தடையும். இதனை கடந்து செல்வதற்காக செல்லிபாளையத்தில் உள்ள பொதுமக்களுக்கு தற்போது புதிதாக ஒரு இடத்தில் மட்டும் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலப்பணி நிறைவடைந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக அதேநிலையில் இருந்து வருகிறது. பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், மழைக்காலம் என்பதால் சாலையை கடந்து செல்ல முடியாத அவல நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலப்பணியை விரைந்து முடித்து, புதிதாக பாலம் அமைத்து பொதுமக்கள் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று செல்லிபாளையம் விநாயகர் ெதரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story