முன்னாள் தி.மு.க. நிர்வாகி கைது
முன்னாள் தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு பூலாங்குடி காலனியை சேர்ந்தவர் விஜி என்ற விஜயகுமார் (வயது 50). இவர் திருவெறும்பூர் ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இவர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமாகிய அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல்பாடுகள் குறித்து வாட்ஸ்-அப் மற்றும் முகநூலில் அவதூறு ஏற்படும் வகையில் கருத்துகளை பரப்பியதாகவும், மிரட்டல் விடுத்து வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாரியப்பன் என்பவர் நவல்பட்டு போலீசில் அளித்த புகாரின்பேரில் விஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நவல்பட்டு விஜி மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அவரை நவல்பட்டு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அப்போது அவர் தனக்கு ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி இருப்பதாக கூறியதையடுத்து, அவரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனைக்கு பிறகு, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story