சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் சாலையில் சிதறிக்கிடந்த காய்கறி மூட்டைகள்
சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் சாலையில் காய்கறி மூட்டைகள் சிதறிக்கிடந்தன.
துவரங்குறிச்சி:
மதுரை காய்கறி மார்க்கெட்டில் இருந்து திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஏராளமான காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் சரக்கு ஆட்டோ டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் சரக்கு ஆட்டோவில் இருந்த காய்கறி மூட்டைகள் சாலைகளில் சிதறி கிடந்தன. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரோந்து போலீசார் அங்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் காய்கறி மூட்டைகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story