தூக்குப்போட்டு பெண் தற்கொலை


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 17 Oct 2021 2:02 AM IST (Updated: 17 Oct 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம் என்கிற பாஸ்கர(வயது 58). இவரது மனைவி அமுதா (45). அமுதா நீண்ட நாட்களாக மூலை நரம்பு பாதிப்பு ஏற்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த ராமலிங்கம் வீட்டில் தன் மனைவி அமுதாவை காணாமல் தேடியுள்ளார். அப்போது தோட்டத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையில் அமுதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் இறக்கி பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து தா.பழூர் போலீசில் ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story