தஞ்சையில் பலத்த மழை


தஞ்சையில் பலத்த மழை
x
தினத்தந்தி 17 Oct 2021 2:47 AM IST (Updated: 17 Oct 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தஞ்சாவூர்;
தஞ்சையில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
வெயில்
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் அடிப்பதும், மாலை மற்றும் இரவு நேரங்களில்மழை பெய்வதுமாக உள்ளது. அதன்படி நேற்று காலை முதல் வழக்கம் போல வெயில் சுட்டெரித்தது. மாலை 3 மணிக்குப்பிறகு வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. 
பரவலாக மழை 
இந்த நிலையில் 3.40 மணி அளவில் திடீரென மழை பெய்யத்தொடங்கியது. அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது. அதன் பின்னர் மீண்டும் 15 நிமிடம் மழை கொட்டியது. பின்னர் சிறிது நேரம் மழை இன்றி காணப்பட்டது. இந்த மழையினால் வெப்பம் குறைந்து இரவு நேரத்தில் குளிர் நிலவியது.

Next Story