தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சாலையில் பள்ளம்
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து ராமவர்மபுரம், காலனிகிழக்கு பகுதிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமானோர் நடந்தும், வாகனங்களிலும் பயணம் செய்கிறார்கள். இந்த சாலையின் நடுவே ஒரு பெரிய பள்ளம் தோன்றியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுகந்த், திருப்பதிசாரம்.
தெருவில் தேங்கும் கழிவுநீர்
நாகர்கோவில், இடலாக்குடி வட்டவிளையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தெருவில் போதிய வடிகால் ஓடை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் ேசர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே இறங்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, தெருவில் மழைநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆதிலிங்கம், வட்டவிளை
சாலையில் தேங்கும் மழை நீர்.
களியக்காவிளை அருகே உள்ள இளஞ்சிறை பகுதியில் உள்ள சாலையில் மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலை எது? பள்ளம் எது? என்று தெரியாமல் விபத்தில் சிக்கி வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சாலையில் தண்ணீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திலீப், குலசேகரம்.
கால்வாயை தூர்வார வேண்டும்
சகாயநகர் ஊராட்சி கிறிஸ்துநகர் ஊரின் தெற்கு பக்கமாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் சரியான பராமரிப்பு இன்றி செடி, ெகாடிகள் வளர்ந்து அடையாளமே தெரியாத வகையில் உருமாறி உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வெற்றி வேந்தன், வெள்ளமடம்.
நடை பாதை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக நடந்து ெசல்கிறவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
Related Tags :
Next Story