திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாவு


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாவு
x
தினத்தந்தி 17 Oct 2021 5:44 AM IST (Updated: 17 Oct 2021 5:44 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலியானார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த சிறுவானூர் கண்டிகையை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (வயது 52). இவர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் பணி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். கடம்பத்தூர்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பிரயாங்குப்பம் அருகே செல்லும்போது நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையால் மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த கோட்டீஸ்வரன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பலியானார்.

இது குறி்த்து இவரது மகன் தினேஷ்குமார் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story