வாலாஜாபாத் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி - அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி பரிதாபம்


வாலாஜாபாத் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி - அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி பரிதாபம்
x
தினத்தந்தி 17 Oct 2021 5:55 AM IST (Updated: 17 Oct 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வாலாஜாபாத், 

வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 50). கூலித்தொழிலாளி. மதுரா மோட்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில் கூலிதொழிலாளியான மணி தனது வீட்டில் இருந்து சற்று தொலைவு சென்றார்.

அப்போது காற்றின் காரணமாக அறுந்து கிடந்த மின்சார கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்கம்பிகள் தாழ்வாக செல்வது குறித்தும், அறுந்து விழும் நிலையில் உள்ளதாகவும் மின்வாரியத்திற்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தும் மின் வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story