தூத்துக்குடி அருகே நாளை மறுநாள் மின்தடை
தூத்துக்குடி அருகே நாளை மறுநாள் மின்தடைசெய்யப்படுகிறது
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் உயரழுத்த மின் பாதைகளில் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பொட்டல் காடு, முள்ளக்காடு மேற்கு பகுதி, ஜோரா நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
அதே போன்று தூத்துக்குடி நகர துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான மீனாட்சிபுரம் முதல் தெரு மற்றும் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள உயரழுத்த மின் பாதையில் நாளை மறுநாள் (புதன்கிழமை) அவசரகால மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் ஜவகர் முத்து தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story