குடியாத்தம் பகுதியில் கொரோனா தடுப்பூசி குறித்து வீடு வீடாக கலெக்டர் ஆய்வு
கொரோனா தடுப்பூசி குறித்து வீடு வீடாக கலெக்டர் ஆய்வு
குடியாத்தம்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தது. பரதராமி மற்றும் ராமாலை கிராமங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆர்.ராமாபுரம் கிராமத்திற்குச் சென்ற கலெக்டர் அங்கு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்களை பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் தாசில்தார் லலிதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பானுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.எஸ்.யுவராஜ், எஸ்.சாந்தி, வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குடியாத்தம் நகராட்சி பகுதியில் 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story