குப்பைகளால் சுகாதார சீர்கேடு


குப்பைகளால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 17 Oct 2021 6:59 PM IST (Updated: 17 Oct 2021 6:59 PM IST)
t-max-icont-min-icon

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

திருப்பூர்
திருப்பூர் ஈஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த கோவில் பகுதியில் பல்வேறு கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவில் அருகே சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இவ்வாறு குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வீசுவதால் கோவிலுக்கு வருகிற பக்தர்களும், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story