விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி
ஊட்டி
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 17-ந் தேதி உலக அதிர்ச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால மருத்துவ பிரிவு சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் மனோகரி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் விபத்து ஏற்படும் நேரங்களில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பது, காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல 108 ஆம்புலன்சை அழைப்பது, ரத்தப்போக்கை கட்டுப்படுத்த அடிபட்ட இடத்தில் நேரடியாக அழுத்தம் கொடுப்பது, விபத்தில் கை, கால்கள் உடைந்து இருந்தால் மேற்கொள்ள வேண்டியது போன்ற உடனடி நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் ஸ்ட்ரெச்சரில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. முன்னதாக அரசு தலைமை மருத்துவமனை ஆர்த்தோ பிரிவு தலைவர் அமர்நாத் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், அரசு டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story