இலங்கை அகதி பலி


இலங்கை அகதி பலி
x
தினத்தந்தி 17 Oct 2021 7:18 PM IST (Updated: 17 Oct 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இலங்கை அகதி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இலங்கை அகதி பலியானார்.  2 பேர் படுகாயம் அடைந்தனர். 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
இலங்கை அகதி
பெருமாநல்லூரிலுள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் ஜெயசேகரன் வயது 43. இவரது நண்பர்கள் பெருமாநல்லூர் முட்டியங்கிணறு பகுதியை சேர்ந்த முருகேசன் 38, திருநெல்வேலியைச் சேர்ந்த கே.பத்மநாபன் 45. இவர்கள் 3 பேரும் நேற்று காலை பெருமாநல்லூர் நான்கு சாலை சந்திப்பிலிருந்து ஈரோடு சாலையில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம் நோக்கி மோட்டார் சைக்களில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை ஜெயசேகரன்  ஓட்டியுள்ளார். மற்றவர்கள் இருவரும் பின்னால் அமர்ந்திருந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஈரோடு சாலையில் சென்றது. அப்போது மறுபுறத்தில் உள்ள முகாமுக்கு செல்வதற்காக, சாலையைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது ஈரோட்டிலிருந்து திருப்பூர் நோக்கி சென்ற  சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
பலி
இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயசேகரன்  உயிரிழந்தார். மற்ற இருவரையும் பெருமாநல்லூர் சோதனைச் சாவடியில் இருந்த போலீசார்  மீட்டு திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயசேகரன் உடலை பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story