குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்


குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 17 Oct 2021 9:11 PM IST (Updated: 17 Oct 2021 9:11 PM IST)
t-max-icont-min-icon

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.

தேனி: 

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நேற்று நடந்தது. இதில் குழந்தைகள் நல சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயக்குமார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் டாக்டர்கள் சுரேகா, சாய் சந்தோஷ், காசி விசுவநாதன், மனநல சிறப்பு டாக்டர் ராஜேஷ்கண்ணன், தோல் நோய் மற்றும் அழகியல் சிறப்பு டாக்டர் மாதவபிரவீன், பல் டாக்டர் இலக்கியா, கேட்பியல்-பேச்சு மற்றும் மொழிப் பயிற்சி நிபுணர் டாக்டர் முருகபிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கினர். 

முகாமில் உடல் எடை, தோல், பற்கள், கேட்கும் திறன், எலும்பு வளர்ச்சி,  திக்குவாய், ஆட்டிசம், மனவளர்ச்சி, ஞாபக சக்தி உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் சத்துணவு குறித்து ஆலோசனை செய்யப்பட்டன. பின்னர் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Next Story