மேலும் 73 பேருக்கு கொரோனா


மேலும் 73 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Oct 2021 9:33 PM IST (Updated: 17 Oct 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

மேலும் 73 பேருக்கு கொரோனா

திருப்பூர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இநநிலையில் தமிழகத்தில் நேற்று 1218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 376ஆக உள்ளது. 
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 76 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 590ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 818 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 968ஆக உள்ளது. 

Next Story