தொடர் மழையால் செட்டிப்பட்டு படுகை அணை நிரம்பியது
திருக்கனூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் செட்டிப்பட்டு படுகை அணை நிரம்பியுள்ளது.
திருக்கனூர், அக்.
திருக்கனூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் செட்டிப்பட்டு படுகை அணை நிரம்பியுள்ளது.
படுகை அணை
புதுவை மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பணை, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் சங்கரா பரணி ஆற்றில் செட்டிப்பட்டு - திருவக்கரை இடையே கட்டப்பட்டுள்ள படுகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் படுகை அணை முழுமையாக நிரம்பி வழிகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பே படுகை அணை நிரம்பியுள்ளதால், செட்டிப்பட்டு, திருவக்கரை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் எதிர்வரும் மழையை கருத்தில் கொண்டு அணையின் வடக்கு பகுதி கரையில் கற்கள் கொட்டி மேலும் பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுபிரியர்கள் அட்டகாசம்
படுகை அணையில் நீர் நிரம்பி உள்ளதால் அதனை காண பொதுமக்கள், குடும்பத்தினருடன் வருகின்றனர். ஆனால் அணை பகுதியிலும், அங்குள்ள மரங்களின் அடியிலும் பலர் அமர்ந்து மது குடிக்கின்றனர். பின்னர் காலி மதுபாட்டில்களை தண்ணீர் வழிந்து செல்லும் தாங்கல் பகுதியில் வீசி உடைக்கின்றனர். இது பொதுமக்கள் கால்களை பதம்பார்த்து வருகிறது.
மதுபிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க அணை பகுதியில் போலீசார் ரோந்து சென்று மது குடிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story