நாமகிரிப்பேட்டை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலி


நாமகிரிப்பேட்டை அருகே  கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 17 Oct 2021 9:58 PM IST (Updated: 17 Oct 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

ராசிபுரம், அக்.18-
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 55) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் உள்ள குட்டையில் தண்ணீர் உள்ளது. 
புதுப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள். தற்போது இவர் சேலம் கன்னங்குறிச்சியில் வசித்து வருகிறார். கடந்த 1 வாரத்திற்கு முன்பு அருள் குடும்பத்துடன் புதுப்பட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவருடைய மகன் ஜெஸ்வின் (8) மற்றும் சில சிறுவர்கள் கல்குவாரி குட்டையில் நீச்சல் அடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது ஜெஸ்வின் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு நாமகிரிப்பேட்டை போலீசார் விரைந்து சென்றனர். ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தின் சிறப்பு நிலை அலுவலர் சேட்டு தலைமையில் விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவனின் உடலை மீட்டனர். கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி இறந்த சிறுவனின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story