திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி 19 பேர் படுகாயம் தேன்கனிக்கோட்டை அருகே விபத்து


திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி 19 பேர் படுகாயம் தேன்கனிக்கோட்டை அருகே விபத்து
x

தேன்கனிக்கோட்டை அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமண கோஷ்டியினர் 
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது பண்டேஸ்வரம். இந்த ஊரை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் அகலக்கோட்டையை அடுத்த மாதேஸ்வரன் கோவிலுக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றனர். அங்கு திருமணம் முடிந்த பின்னர் அனைவரும் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். 
அந்த வேனை பண்டேஸ்வரத்தை சேர்ந்த மணி (வயது28) என்பவர் ஓட்டிச் சென்றார். வேன் தேன்கனிக்கோட்டை-பாலதொட்டனப்பள்ளி சாலையில் ஒசட்டி கிராமம் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
வேன் கவிழ்ந்து 2 பேர் பலி 
இந்த விபத்தில் வேனில் சென்ற 21 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் பண்டேஸ்வரம் சவுடாரெட்டி (60) என்பவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். 
மேலும் படுகாயம் அடைந்த காந்தராஜ் என்பவரின் மகனான கிரண் (12) என்ற 6-ம் வகுப்பு மாணவன், முத்தம்மா (50), சீனிவாசன் (45), வெங்கட்ராஜ் (38), முத்தப்பா (66) உள்ளிட்ட 20 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மாணவன் கிரண்  சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான்..
19 பேர் படுகாயம் 
தொடர்ந்து படுகாயம் அடைந்த 19 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் விபத்துக்குள்ளான வேனை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் படுகாயம் அடைந்து  சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story