ஒகேனக்கல் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
ஒகேனக்கல் மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து கோவையை சேர்ந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
பென்னாகரம்:
கோவை மாவட்டம் சின்னதடாகம் பகுதியை சேர்ந்த 11 பேர் ஒரு வேனில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர் நேற்று மாலை ஊருக்கு புறப்பட்டனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையம் அருகில் மலைப்பாதை வளைவில் வந்தபோது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் சென்ற 11 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story