தண்டராம்பட்டு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


தண்டராம்பட்டு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2021 10:27 PM IST (Updated: 17 Oct 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமாரசாமி, லட்சுமி நாராயணன், ஆனந்தன் ஆகியோர் மலமஞ்சனூர் தேவரடியார் குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், தானிப்பாடி அருகே உள்ள கீரனூர் கிராமத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன் (வயது 24), சிதம்பரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து தென்முடியனூர், மலமஞ்சனூர், ரெட்டியார் பாளையம் ஆகிய பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

பின்னர் அவர்களை கைது செய்து, 20 பவுன் நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள், கத்தி, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story