தொடர் திருட்டில் ஈடுபட்ட ஆசாமி கைது
ராமேசுவரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஆசாமி கைது செய்யப்பட்டார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பல வீடுகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர் திருட்டு நடைபெற்றது. தொடர் திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் ராமேசுவரம் துணை சூப்பிரண்டு தீபக்சிவாஜ் மேற்பார்வையில் ராமேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.இதற்கிடையே தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியில் உள்ள வீட்டில் திருட முயன்ற ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அசோகன் என்பவரது மகன் சரவணன் (வயது33) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பல வீடுகளில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்டதனர். அவரிடம் இருந்து மடிக்கணினி, 10¼ பவுன் நகைகள், ரூ.19 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story