உரக்கடையில் அதிகாரிகள் ஆய்வு
தேவகோட்டையில் உரக்கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை பகுதியில் சில உரக்கடைகளில் உரம் வாங்கும் போது ஒவ்வொரு மூடைக்கும் அதிகமாக 500 ரூபாய் கொடுத்து நுண்ணூட்டம் மற்றும் ஜிங்க் சல்பேட் ஆகிய உரங்களை வாங்க வேண்டும் என வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இது குறித்து தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் கதிரவன் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரனிடம் புகார் தெரிவித்தார். .அவரது உத்தரவின்பேரில் வேளாண்மை அதிகாரி கமலாதேவி மற்றும் தேவகோட்டை வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று திடீர் சோதனையிட்டனர். அப்போது உரவிற்பனையாளரிடம், விவசாயிகளை மற்ற உரம் வாங்க வற்புறுத்தினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.உடனடியாக விவசாயிகள் கேட்கும் உரத்தை மட்டும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story