பொதுமக்களுடன் போலீசார் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
பொதுமக்களுடன் போலீசார் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என திருப்பத்தூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் போலீசாருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் போலீஸ் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், கீழச்சிவல்பட்டி, நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, சிங்கம்புணரி உள்ளிட்ட 13 போலீஸ் நிைலயங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும் போது, பொதுமக்களுடன் போலீசார் நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். கிராமங்களில் கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் கொடுக்கக்கூடிய மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 24-ந்தேதி திருப்பத்தூரில் நடைபெற உள்ள மருதுபாண்டியர் அரசு விழாவுக்கும், 27-ந்தேதி காளையார்கோவிலில் நடைபெற உள்ள மருதுபாண்டியர் அரசு விழாவுக்கும், 30-ந்தேதி தேவர் குரு பூஜை விழாவுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story