திறக்கப்படாத புறக்காவல் நிலையம்


திறக்கப்படாத புறக்காவல் நிலையம்
x
தினத்தந்தி 18 Oct 2021 12:05 AM IST (Updated: 18 Oct 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் தயார் நிலையில் உள்ள புறக்காவல் நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் தயார் நிலையில் உள்ள புறக்காவல் நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
புறக்காவல் நிலையம் 
அருப்புக்கோட்டை நகரில் வழிப்பறி, திருட்டு, கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக நகரின் நான்கு எல்லைகளிலும் புறக்காவல் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி பாளையம்பட்டி விலக்கு, ராமசாமிபுரம், புளியம்பட்டி, காந்திநகர் ஆகிய பகுதிகளில் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் தற்போது நிறைவுற்று புறக்காவல் நிலையம் திறப்பு விழாவிற்கு தயார்நிலையில் உள்ளது. 
இந்த புறக்காவல் நிலையத்தை திறந்தால் மதுரை, விருதுநகர், திருச்சுழி, சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்வதன் மூலம் கடத்தல் சம்பவம் வெகுவாக குறையும். 
நடவடிக்கை 
மேலும் இங்கு அதிநவீன கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதால் வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் பெருமளவில் குறையும் என பொதுமக்கள் கருதுகின்றனர். 
எனவே பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ள புறக்காவல் நிலையத்தை உடனே திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story