விழாவின் போது மயங்கி விழுந்தவர் சாவு


விழாவின் போது மயங்கி விழுந்தவர் சாவு
x
தினத்தந்தி 18 Oct 2021 1:05 AM IST (Updated: 18 Oct 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

விழாவின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார்

மலைக்கோட்டை
ஸ்ரீ கிருஷ்ணா யாதவ மேம்பாட்டுக்கழகம், ஸ்ரீகிருஷ்ணா யாதவ அறக்கட்டளை சார்பில் 31-ம் ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ ராதா கிருஷ்ண திருமண விழா நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஹாலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது ஸ்ரீகிருஷ்ணா யாதவா மேம்பாட்டுக்கழகம் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் என்.வி.தங்கமணி யாதவ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக நிர்வாகிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.


Next Story