‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 17 Oct 2021 7:43 PM GMT (Updated: 17 Oct 2021 7:43 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு

 தஞ்சையை அடுத்த சீனிவாசபுரம் பகுதியில் செக்கடி தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறி பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தெருவில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-ராஜ்மோகன், தஞ்சாவூர்

தார்ச்சாலை வேண்டும்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த கிளாமங்கலம் பகுதியில் வேதநாயகிபுரம் தெற்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கிளாமங்கலம்-மேடையக்கொல்லை சாலையையும், குருந்தையானர் கோவில் சாலையையும் இணைக்கும் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த சாலை வழியாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ அதுமட்டுமின்றி அந்த சாலை வழியாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என அனைத்துத்தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார் சாலை அமைத்து தர வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-செந்தில்குமார், வேதநாயகிபுரம்.

சாலையில் தேங்கும் மழைநீர்

 தஞ்சையை அடுத்த ஆலக்குடி கிராமம் 2-வார்டு கீழத்தெருவில் உள்ள சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், தேங்கிக் கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, கன மழை பெய்தால் சாலையில் தேங்கும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆலக்குடி கிராமம் கீழத்தெருவில் உள்ள சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
- இன்பராஜன், ஆலக்குடி.

மின்கம்பியில் சிக்கியுள்ள மரக்கிளைகள்

 தஞ்சை பகுதி 6-வது வார்டு கங்காநகர் பகுதியில் உள்ள மின்கம்பங்களை மரக்கிளைகள் சூழ்ந்துள்ளன. குறிப்பாக மழைக்காலங்களில் தென்னை மரத்தின் மட்டைகள் மின்கம்பிகள் மீது விழுந்து விடுகின்றன. இதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், மின்கம்பிகளில் தென்னைமர மட்டைகள் சிக்கி உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தில் சிக்கி கிடக்கும் மரக்கிளைகளை அகற்றவும், மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், தஞ்சாவூர்.


Next Story