கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி பலி கும்பகோணத்தை சேர்ந்த தந்தை- மகன் உடல்கள் தகனம்
கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி பலியான கும்பகோணத்தை சேர்ந்த தந்தை, மகனின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
கும்பகோணம்:-
என்ஜினீயர்
பாலாஜி கடந்த 8-ந் தேதி வார விடுமுறையையொட்டி அந்த நாட்டில் உள்ள கடற்கரைக்கு குடும்பத்தினருடன் சென்றார். அப்போது கடலில் சிக்கி தவித்த ஒரு பெண்ணை காப்பாற்ற முயன்ற பாலாஜியை அலை இழுத்து சென்றது. அவரை காப்பாற்றுவதற்கு ரக்சனும் கடலில் இறங்கினார். இந்த நிலையில் தந்தையும், மகனும் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தை கடற்கரையில் இருந்து பார்த்த பாலாஜியின் மனைவி சுந்தரி மற்றும் மகள் ரிஷிவந்திகா ஆகிய இருவரும் கதறி துடித்தனர்.
சொந்த ஊரில் தகனம்
அவர்களுடைய உடல்களை பார்த்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இருவருடைய உடல்களும் அருகே உள்ள மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது. கும்பகோணத்தை சேர்ந்த தந்தை- மகன் வெளிநாட்டில் கடலில் மூழ்கி ஒரே நேரத்தில் இறந்தது கும்பகோணம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story