மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Public demonstration

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை:
பாளையங்கோட்டை சமாதானபுரம் அம்பேத்கர் நகரில் குடிசை மாற்று வாரியம் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இங்கு 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நெல்லையில் பலத்த மழை பெய்தது. அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை காங்கிரீட் பூச்சு திடீரென்று பெயர்ந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு வசித்தவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே  பாளையங்கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பழுதடைந்த கட்டிடங்களை உடனே சீரமைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
3. பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அனைத்து சுகாதார ஆய்வாளர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. சுகாதார ஆய்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சுகாதார ஆய்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.