போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2021 1:53 AM IST (Updated: 18 Oct 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அருகே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த வடக்கு காருக்குறிச்சி பாறையடி தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 52). இவர் நெல்லை மாநகர போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், மருதுபாண்டி என்ற மகனும், இந்துமதி என்ற மகளும் உள்ளனர். 
நெல்லை டவுன் காவலர் குடியிருப்பில் இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

விஷம் குடித்து தற்கொலை

இந்த நிலையில் அவர் நேற்று காலை சொந்த ஊரான வடக்கு காருக்குறிச்சிக்கு சென்றார். அங்கு வீட்டின் பின்புறம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே இசக்கிமுத்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவக்கப்பட்டது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story