அம்மன் கோவில்களில் தசரா விழா


அம்மன் கோவில்களில் தசரா விழா
x
தினத்தந்தி 18 Oct 2021 2:07 AM IST (Updated: 18 Oct 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கொக்கிரகுளத்தில் அம்மன் கோவில்களில் தசரா விழா நடந்தது.

நெல்லை:
நெல்லை கொக்கிரகுளத்தில் அம்மன் கோவில்களில் நேற்று தசரா விழா கொண்டாடப்பட்டது.

தசரா விழா

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள குருசாமி சமேத முத்தாரம்மன் கோவிலில் நேற்று தசரா திருவிழா நடந்தது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு ஹோமமும், துர்கா பூஜையும் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
இரவு 10 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவில் பிரகாரத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

புது அம்மன்

இதேபோல் கொக்கிரகுளத்தில் உள்ள புதுஅம்மன், உச்சிமாகாளி அம்மன் கோவில்களிலும் நேற்று தசரா விழா நடந்தது. அங்கு அம்மனுகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.
இரவு 9 மணிக்கு புதுஅம்மன், உச்சிமாகாளி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவில் பிரகாரத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

Next Story