மேட்டூர் மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன


மேட்டூர் மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன
x
தினத்தந்தி 18 Oct 2021 3:28 AM IST (Updated: 18 Oct 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்தன.

மேட்டூர்:
மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் மேட்டூரில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. கொட்டித்தீர்த்த இந்த மழையால் மேட்டூர் மலைப்பாதையில் சிறிய பாறைகள் மற்றும் கற்கள் பெயர்ந்து விழுந்தன. அந்த சமயத்தில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனிடையே அந்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாறைகளை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

Next Story