இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதல்; 4 பேர் காயம்
அமைந்தகரையில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.
பூந்தமல்லி,
சென்னை அமைந்தகரை, செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் மூசா (வயது 42). என்ஜினீயரான இவர், நேற்று முன்தினம் இரவு அமைந்தகரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனமும், இவரது இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூசா மற்றும் எதிரே வந்து மோதிய இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் என 4 பேரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 4 பேரையும் பொதுமக்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மூசா மீது மோதிய இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், குன்றத்தூர் தண்டலம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான விக்னேஷ் (20), சியாம் (18), பரத் (18) என்பதும், இவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் கபடி விளையாட இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரிந்தது.இவர்களில் விக்னேஷ், பரத் இருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சியாம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் காயம் அடைந்த மூசா, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story