கார் கண்ணாடியை உடைத்து 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை


கார் கண்ணாடியை உடைத்து 4 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 18 Oct 2021 4:22 AM IST (Updated: 18 Oct 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் கண்ணாடியை உடைத்து 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆலந்தூர், 

சென்னை பாரிமுனையில் இருந்து புதுச்சேரியில் உள்ள நகை கடைக்கு கொலுசு உள்பட 30 கிலோ வெள்ளி பொருட்களை வாங்கி கொண்டு நகை கடை ஊழியர் ஆறுமுகம் (வயது 55), கார் டிரைவர் மணிகண்டன் (40) ஆகியோர் காரில் புறப்பட்டு சென்றனர். பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இருவரும் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டனர்.

அப்போது மற்றொரு காரில் வந்த கும்பல், இவர்களது காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து, அதில் இருந்து 4 கிலோ வெள்ளி பொருட்களை மட்டு்ம் திருடினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் மணிகண்டன், கொள்ளை கும்பலை தடுத்தார். அவரை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு அந்த கும்பல் வெள்ளி பொருட்களுடன் அங்கிருந்து தப்பியது.

இது குறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story