ரெயில்வே மேம்பால பணிக்காக வைக்கப்பட்ட இரும்பு தளவாட பொருட்கள் திருட்டு;2 வாலிபர்கள் கைது


ரெயில்வே மேம்பால பணிக்காக வைக்கப்பட்ட இரும்பு தளவாட பொருட்கள் திருட்டு;2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 18 Oct 2021 5:31 AM IST (Updated: 18 Oct 2021 5:31 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே மேம்பால பணிக்காக வைக்கப்பட்ட இரும்பு தளவாட பொருட்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த புட்லூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரெயில் நிலையம் அருகே இரும்பு தளவாட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு இருந்த இரும்பு தளவாட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் அதனை ஒரு மினி வேனில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அங்கு இருந்த இரும்பு தளவாட பொருட்களை திருடியது திருவள்ளூரை அடுத்த திருவூர் பகுதியை சேர்ந்த இனியன் (வயது 29), அஜய் (22) ஆகிய 2 பேர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த இரும்பு தளவாட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story