படப்பையில் இருந்து ஒரகடம் வரையிலான குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
படப்பையில் இருந்து ஒரகடம் வரையிலான குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக சென்னை, காஞ்சீபுரம், தாம்பரம், பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த முக்கிய சாலையில் படப்பையில் இருந்து ஒரகடம் வரை பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். குண்டும், குழியுமான இந்த சாலையால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில்,
வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் முக்கிய அதிகாரிகள் முதல் சாதாரண மக்கள் வரை சென்று வருகின்றனர். ஆனால் படுமோசமாக உள்ள இந்த நெடுஞ்சாலையை சீரமைக்க அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையின் ஓரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சாலையை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story