அணைப்பகுதியில் 8 மில்லி மீட்டர் மழைப்பதிவு


அணைப்பகுதியில்  8 மில்லி மீட்டர் மழைப்பதிவு
x
தினத்தந்தி 18 Oct 2021 4:02 PM IST (Updated: 18 Oct 2021 4:02 PM IST)
t-max-icont-min-icon

அணைப்பகுதியில் 8 மில்லி மீட்டர் மழைப்பதிவு

திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினமும் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதன்படி மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழை அளவின் விவரம் வருமாறு
திருப்பூர் வடக்கு பகுதியில் 1 மில்லி மீட்டரும், அவினாசியில் 3 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணைப்பகுதியில் 8 மில்லி மீட்டரும், அமராவதி அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டரும், உடுமலையில் 5.60 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணை உள்பகுதியில் 7.20 மில்லி மீட்டரும் என மாவட்டத்தில் மொத்தம் 29.80 மில்லி மீட்டர் மழைப்பதிவானது. இதன் சராசரி 1.75 மில்லி மீட்டர் ஆகும். 

Next Story