குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர் நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினா்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்து நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினார்கள்.
தசரா திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்த ஆண்டு கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவில் 9 நாட்களிலும் அம்மன் ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் விழா கடந்த 15-ந் தேதி நள்ளிரவு நடந்தது. மறுநாள் மாலை 5 மணிக்கு காப்பு களைதலும், நேற்று முன்தினம் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் விழா நிறைவு பெற்றது.
பக்தர்கள் தரிசனம்
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதன்பின்னர் நேற்று காலை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தங்களது வேண்டுதலை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.
மாலை அணிந்த பக்தர்கள் கோவிலில் மாலை மற்றும் காப்புகளை களைந்து கோவில் உண்டியலில் தங்களது காணிக்கைகளை செலுத்தினர்.
தீச்சட்டி ஏந்தி வந்தனர்
பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும் கோவிலுக்கு வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவே பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்ததால் ஊர் முழுவதும் பக்தர்களின் வாகனங்கள் நின்றதை காண முடிந்தது.
மேலும் கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்படாததால் பக்தர்கள் வெயிலில் நின்றவாறு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
Related Tags :
Next Story