ஆத்தூரில் செல்போன் கடை ஊழியர் மீது தாக்குதல்


ஆத்தூரில் செல்போன் கடை ஊழியர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 18 Oct 2021 6:32 PM IST (Updated: 18 Oct 2021 6:32 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் செல்போன் கடை ஊழியர் தாக்கப்பட்டார்

ஆறுமுகநேரி:
தெற்கு ஆத்தூரைச் சேர்ந்த முனியசாமி மகன் கார்த்திக் (வயது 27). இவர் ஏரலில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். அந்த கடைக்கு கடந்த மாதம் 2-ந் தேதி ஆத்தூர் அருகே உள்ள கீரனூர் கீழக்கு தெருவை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் சிவாஜோதிபாசு (40) வந்தார். இவர் கடையில் ரூ.4 ஆயிரத்து 200 செலுத்தி ரூ.18ஆயிரத்து 500 மதிப்புள்ள ஒரு செல்போனை பைனான்ஸ் மூலம் வாங்கி சென்றுள்ளார். 
பின்னர் சிவாஜோதிபாசு கடந்த 2-ந்தேதி கட்ட வேண்டிய தவணை தொகையை கடையில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.. இதனால் நேற்று முன்தினம் மாலையில் கீரனூர் கிழக்கு தெருவில் வசிக்கும் சிவஜோதிபாசுவை கார்த்திக், அவருடன் வேலை பார்க்கும் அபுதாஹீர், பைனான்ஸ் நிறுவன ஊழியர் பிரதீப் ஆகியோர் சந்தித்து தவணை தொகையை கேட்டுள்ளனர். 
அப்போது சிவ ஜோதிபாசு ஆபாசமாக கார்த்திகை பேசியதோடு மட்டுமல்லாமல் அடித்து உதைத்தாராம். இது தொடர்பாக கார்த்திக் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இவரது புகாரின் பேரில் போலீஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து சிவஜோதிபாசுவை தேடி வருகிறார்.

Next Story