ஆம்புலன்சு டிரைவர் குத்திக்கொலை


ஆம்புலன்சு டிரைவர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2021 6:56 PM IST (Updated: 18 Oct 2021 6:56 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சு டிரைவரை குத்திக்கொலை செய்த மற்றொரு ஆம்புலன்சு டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சு டிரைவரை குத்திக்கொலை செய்த மற்றொரு ஆம்புலன்சு டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கத்திக்குத்து
திருப்பூர் முத்தனம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் வயது 25. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். விக்னேஷ் தனியார் ஆம்புலன்சு டிரைவராக இருந்து வந்தார். திருப்பூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சை நிறுத்தி ஓட்டி வந்தார்.
அதே பகுதியில் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த அசோக்குமார் 23என்பவரும் தனியார் ஆம்புலன்சு டிரைவராக இருந்து வருகிறார். வாடகை பிடிப்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணி அளவில் திருப்பூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு முன்பு விக்னேசுக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விக்னேஷ், கல்லை எடுத்து அசோக்குமார் ஓட்டி வந்த ஆம்புலன்சில் இருந்த குளிர்சாதன பெட்டியின் பிரீசர்பாக்ஸ் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேசின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் கீழே விழுந்தார்.
வாலிபர் கைது
அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். கத்திக்குத்து காரணமாக ரத்தம் அதிகம் வெளியேறியதால் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விக்னேஷ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பே உதவி செய்ய யாரும் முன்வராததால் ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்து விட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story