கயத்தாறு அருகே விவசாயி தூக்கு போட்டு தற்கொலை


கயத்தாறு அருகே விவசாயி தூக்கு போட்டு  தற்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2021 7:08 PM IST (Updated: 18 Oct 2021 7:08 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் சண்முகையா (வயது 28), விவசாயி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (22). இவர்களுக்கு தற்போது 4 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பேறு காலத்தை முன்னிட்டு தாய் வீட்டுக்கு சென்ற முத்துலட்சுமியை வீட்டிற்கு வருமாறு சண்முகையா பல முறை அழைத்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை. இதனால் விரக்தியடைந்த சண்முகையா நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சண்முகையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story