நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 435 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 435 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 18 Oct 2021 9:10 PM IST (Updated: 18 Oct 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 435 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 435 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-450, ஐதராபாத்-416, விஜயவாடா-425, மைசூரு-445, மும்பை-468, பெங்களூரு-440, கொல்கத்தா-476, டெல்லி-435.
கறிக்கோழி
கறிக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.107 ஆக அதிகரித்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
புரட்டாசி மாதம் முடிவடைந்து இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை நுகர்வு சற்று அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பிற மண்டலங்களிலும் முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்து வருவதால், அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Next Story