தெற்கு ஆத்தூரில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த பெண் கைது
தெற்கு ஆத்தூரில் பஸ்சில் ஏறிய மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த பெண் கைது செய்யப்பட்டார்
ஆறுமுகநேரி:
தெற்கு ஆத்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி மனைவி வேல்கனி (வயது 73). இவர் நேற்று மதியம் திருச்செந்தூர் செல்வதற்காக தெற்கு ஆத்தூர் பஸ்நிறுத்தத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் இருந்து ஒரு பெண் இடித்துக்கொண்டு கீழே இறங்கியுள்ளார். பஸ்சில் ஏறியவுடன் சுதாரித்துக்கொண்ட வேல்கனி, தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை பார்த்துள்ளார். அப்போது சங்கிலி காணாமல் போனது தெரிந்துள்ளது.
உடனே பஸ்சை நிறுத்தி கீழே இறங்கி அந்த பெண்ணை வேல்கனி தேடினார். அவருடன் உறவினர்களும் சேர்ந்து தேடினர். தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசாரும் வந்து பஜார் முழுவதும் தேடினர்.
பின்னர் அங்கிருந்து வடக்கு ஆத்தூர் வந்தபோது பஸ்நிலையத்தில் வேல்கனி கூறிய அடையாளத்துடன் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், தூத்துக்குடி ஓடக்கரை அண்ணாநகரை சேர்ந்த பாபு மனைவி பார்வதி (37) என்பதும், வேல்கனியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை அபேஸ் செய்து வைத்திருந்ததும் தெரியவந்்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சங்கிலியை மீட்டனர். மூதாட்டியிடம் சங்கிலியை அபேஸ் செய்த பெண்ணை ஒரு மணி நேரத்திற்குள் பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story