நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 18 Oct 2021 3:48 PM GMT (Updated: 18 Oct 2021 3:48 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51,611 ஆக அதிகரித்துள்ளது.
53 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,558 ஆக அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 611 ஆக அதிகரித்து உள்ளது.
615 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 44 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 50 ஆயிரத்து 504 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 492 பேர் பலியான நிலையில் 615 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கொரோனாவின் 3-வது அலையை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story