தனியார் தொழிற்சாலைக்கு ‘சீல்' வைக்க முயன்றதால் பரபரப்பு
நிலக்கோட்டை அருகே வங்கிக்கடனை திருப்பி செலுத்தாத தனியார் தொழிற்சாலைக்கு சீல் வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள குன்னுவராயன்கோட்டை ஊராட்சி பகுதியில் செயல்படுகிற தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், திண்டுக்கல்லில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.11 கோடி கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், தொழிற்சாலைக்கு சீல் வைக்க திண்டுக்கல் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, கோர்ட்டு மூலம் நியமிக்கப்பட்ட நீதிமன்ற கமிஷனர் கணபதி தலைமையில், விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் அந்த தொழிற்சாலைக்கு ‘சீல்'வைக்க நேற்று சென்றனர். அப்போது அங்கு வந்த தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள், கோர்ட்டு ஊழியர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தொழிற்சாலையை ‘சீல்' வைக்க முடியாமல் கோர்ட்டு ஊழியர்கள் திரும்பி சென்றனர். இதுதொடர்பாக விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் கணபதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தொழிற்சாலைக்கு சீல் வைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story