‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 Oct 2021 10:50 PM IST (Updated: 18 Oct 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


குண்டும் குழியுமான சாலை

நெல்ைல டவுனில் மாநகராட்சி மீன் மார்க்கெட் அருகே பல மாதங்களாக சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டுகிறேன்.
கதிர்வேல், நெல்லை டவுன்.

கழிவுநீரில் மிதக்கும் குடிநீர் குழாய்

பாளையங்கோட்டை அருகே கீழமுன்னீர்பள்ளம் கிராமத்தில் வாட்டர் டேங்க் தெருவில் வாறுகால் உடைந்துள்ளது. இதனால் அங்குள்ள குடிநீர் குழாயை சுற்றி கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனை பார்க்கும்போது கழிவுநீரில் குடிநீர் குழாய் மிதப்பது போன்று காட்சி அளிக்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ராஜசெல்வம், கீழமுன்னீர்பள்ளம்.

சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?

பாளையங்கோட்ைட 28-வது வார்டு சேவியர் காலனி பெரிய பூங்கா தெரு அருகில் சிறுவர் பூங்கா பயனற்ற நிலையில் உள்ளது. இதனை சரிசெய்து கொடுத்தால் சிறுவர்கள் விளையாடவும், பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, சிறுவர் பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
அந்தோணிராஜ், குலவணிகர்புரம்.

சாலையை சரிசெய்ய வேண்டும்

ராதாபுரம் தாலுகா ஏ.வி.தாமஸ் மண்டபம் வழியாக கன்னியாகுமரி- திருச்செந்தூர் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை அண்மையில் உயர்த்தி அமைக்கப்பட்டது. இதனால் ஏ.வி.தாமஸ் மண்டபத்தின் தெற்கு பகுதி மிகவும் தாழ்வாக மாறியதால், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே, தெருவில் உள்ள சாலைகள் நெடுஞ்சாலையோடு இணையும் இடத்தை வாகனங்கள் சென்று வர வசதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

நாய் தொல்லை

நெல்லை சிந்துபூந்துறை நடுத்தெருவில் உணவக கேண்டீன் அருகே தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் பொதுமக்களை பயமுறுத்துகின்றன. மேலும் சிலர் அந்த நாய்களை, அந்த தெருவில் உள்ள மின்கம்பங்களின் இரவு நேரத்தில் கட்டி வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூக்கம் தொலைத்து அவதிப்படுகின்றனர். எனவே, தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
மாரியப்பன், சிந்துபூந்துறை.

உயர்கோபுர மின்விளக்கு

தென்காசி மாவட்டம் கடையம் பஸ் நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கு மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால் இந்த பகுதியில் போதுமான மின்விளக்கு வசதிகள் இல்லை. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, பஸ்நிலைய பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்ஜத், முதலியார்பட்டி.

சாலைப்பணிகள் விரைவில் முடியுமா?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பணிகள் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். வருகிற 1-ந் தேதி முதல் தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அந்த வழியாக செல்லும் பள்ளிக்குழந்தைகளும் சிரமப்படுவார்கள். மழைக்காலம் தொடங்க உள்ளதால் இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ர.கணேசன், திருச்செந்தூர்.

பஸ் வசதி தேவை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ளது முள்ளூர் கிராமம். தூத்துக்குடியில் இருந்து எப்போதும்வென்றான் வழித்தடத்தில் மிளகுநத்தம் வரை அரசு டவுன் பஸ் 57-பி செல்கிறது. இதனை அய்யர்பட்டி, முள்ளூர் வரை நீட்டிக்க வேண்டும். இதனால் முள்ளூர் கிராமமக்கள் மட்டுமன்றி, முள்ளூரில் இருந்து மேல்படிப்புக்காக 8 கிலோமீட்டர் தூரம் தொலைவில் காட்டுநாயக்கன்பட்டி பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் பெரிதும் பயன் அடைவார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
ஏ.குபேந்திரன், முள்ளூர்.

எரியாத தெருவிளக்குகள்

ஆத்தூர் முஸ்லிம் மேலத்தெரு, குளத்தாங்கரை தெரு ஆகிய 2 தெருக்களிலும் கடந்த 2 மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, தெரு விளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
வி.ஜாகிர் உசேன், ஆத்தூர்.

Next Story