புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2021 11:12 PM IST (Updated: 18 Oct 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

குளித்தலை
குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் உள்ள தங்களது பெட்டி கடைகளில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்ற குளித்தலை கடம்பர்கோவில் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் (வயது 45), குளித்தலை அருகே உள்ள தாளியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களது கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story