வருமானவரித் துறையினர் போல் நடித்து பணம் பறித்த வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
பணம் பறித்த வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தொழிலதிபர் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் போல் நடித்து ரூ.6 லட்சத்தை எடுத்து சென்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் நரேந்திரநாத் என்பவர் மீது சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஏற்கனவே சி.பி.ஐ அதிகாரி என கூறி பணம் பறிப்பு செயலில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு உள்ளது.
இதனால் அவரை குண்டல் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story