மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகள், 2 சரக்கு வேன்கள் பறிமுதல்
அறந்தாங்கி, கறம்பக்குடியில் மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகள், 2 சரக்கு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அறந்தாங்கி,
6 பேர் மீது வழக்கு
அறந்தாங்கி அருகே கடையாத்துபட்டி பகுதியில் அறந்தாங்கி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வெள்ளாற்று பகுதியில் இருந்து மாட்டுவண்டியில் மணல் அள்ளி வந்த அழியாநிலை பகுதியை சேர்ந்த லெட்சுமணன், மதியழகன், படிகாசு, சுரேஷ், தினேஷ்குமார், சாத்தையா ஆகிய 6 பேர் மீது அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் அறந்தாங்கி எல்.என்.புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை சோதனை செய்ததில் திருட்டு தனமாக மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரக்கு வேன் பறிமுதல்
கறம்பக்குடி பகுதியில் சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தென்னகர் தொண்டராம் குளம் அருகே சென்ற சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காட்டாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்து கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story